அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!

அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை!

Update: 2020-04-17 14:20 GMT

ஊரடங்கு உத்தர அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க மாநில அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு நிர்ணயம் செய்த நேரத்திற்கு முன்னதாக கடைகள் மூடப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன இதனையடுத்து இன்று குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கந்தசாமி, துறை அதிகாரிகளுடன் நகரப்பகுதியில் உள்ள காஸ்ட் பிரைஸ் ஷாப்பில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ஊரடங்கு உத்தரவிற்கு முன்பும், தற்போது விற்பனை செய்யும் விலை குறித்து கேட்டறிந்தார் மேலும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தினார்.


ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கந்தசாமி:

"பொது மக்களின் புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததாகவும், மளிகை பொருட்களின் விலைகளை மாநில அரசே நிர்ணயம் செய்து கடைகள் முன்பு விலைப்பட்டியல் வைக்கப்படும்" என்றும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Similar News