மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை!

மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை!

Update: 2020-04-10 12:17 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளரை சந்தித்த அவர் "மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் "என எச்சரித்தார்.

நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த சூழ்நிலை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில பகுதிகளில் மளிகை பொருட்களை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் வந்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறிய அவர், வியாபாரிகள் பொருட்களை சரியாக உரிய விலையில் விற்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தவர், அதை மீறி யாராவது கூடுதல் விலைக்கு மளிகைப் பொருள்களை விற்கவோ அல்லது பதுக்கலில் ஈடுபட்டால் அவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Similar News