அனைத்தும் அறிந்த கூகுளை பற்றி யாரும் அறியாத சுவரஸ்ய தகவல்கள். கூகுளின் வெற்றிகதை.

அனைத்தும் அறிந்த கூகுளை பற்றி யாரும் அறியாத சுவரஸ்ய தகவல்கள். கூகுளின் வெற்றிகதை.

Update: 2020-04-09 01:37 GMT

இணையம் மக்களிடம் பரவ ஆரம்பித்த போதே தேடுதளம் என்ற புதிய கருத்துருவாக்கத்தை கையில் எடுத்து, களத்தில் குதித்ததே கூகுளின் வெற்றி. சரியான நேரத்தில் சரியான விதத்தில் எடுக்கப்படும் முடிவுகளே மாபெரும் வெற்றிக்கும் அடித்தளம் என்பதை நடைமுறையில் மெய்பித்த வலைதளம் கூகுள். அதனின் சில குறிப்புகள் இங்கே....

1. கூகுளில் ஒரு நாளில் தேடப்படும் விஷயங்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டுகிறது. அண்டார்டிக்கா கண்டத்திலிருந்து கூட கூகுளை தினசரி உபயோகிப்பவர் இருக்கிறார்கள்.

2. ஆங்கிலத்தில் இதன் பெயர் "Google" என்று எழுதப்படுகிறது. உண்மையில் இது தற்செயலாக அமைந்த ஒன்று. இதனுடைய நிறுவனர்கள் இதை "googol" என்று பெயரிடவே ஆயத்தமானர்கள். ஆனால் ஒரு சிறு எழுத்துபிழையில் கூகுளின் வரலாறே மாறிப்போனது.

3. 1996 ஆம் ஆண்டு அரம்பிக்கப்பட்ட கூகுளை கண்டுபிடித்தவர்கள் "லேரி பேஜ்" மற்றும் "செர்ஜி பிரின்". இதை கண்டுபிடித்த போது அவர்களின் வயது 24 மற்றும் 23.

4. கூகுள் என்பதற்க்கு கணிதமொழியில் ஒரு அர்த்தம் உண்டு. ஒன்று என்ற எண்ணை தொடர்ந்து 100 பூஜ்ஜியங்கள் இருந்தால் அந்த எண்ணின் பெயர் கூகுள்.

5. இதனுடைய 97% வருமானம் இந்த வலைதளத்தில் இடம்பெறும் விளம்பரங்கள் மூலமே வருகிறது.

6. இந்த தேடுத்தளம் பிரபலமாக திருப்புமுனையாய் அமைந்த மற்றொரு அம்சம். இந்த தேடுத்தளத்தில் நாம் தேடும் விஷயத்தை எழுத்துபிழையுடன் தட்டச்சு செய்தாலும் "நீங்கள் இதை தானே நினைத்தீர்கள்" (Did you mean...?) என்ற வாசகத்துடன் நாம் தட்டச்சு செய்ய நினைத்ததை சரியாக யூகித்து கொடுக்கும். இந்த புதிய யுத்தியின் மூலமாக பல தொழிநுட்ப நெரிசல் ஏற்பட்டாலும் அதை நேர்மறையாய் எடுத்து கொண்ட கூகுளின் புதிய அணுகுமுறை அதற்கு மேலும் பல வெற்றிகளை பெற்று தந்தது.

7. கூகுளின் முகப்பு பக்கத்தில் அதனுடைய பெயர் பல வடிவங்களில், வித்தியாசமான வடிவமைப்புகளில் அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். காரணம், அது உபயோகப்படுத்தப்படும் நாடுகளின் விழாக்கள், பண்டிகைகள், அறிய கண்டுபிடிப்பு தினங்கள் என அனைத்து கலாச்சாரத்திற்க்கும், உணர்வுகளுக்கும், உருவாக்கங்களுக்கும் மரியாதை செலுத்தவே. இது மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வடிவமைப்புக்கு டூடுள்(doodle) என்று பெயர்.

8. பில்லியன் கணக்கில் இந்த தேடுதளத்தில் தேடும் படலம் தொடர்ந்தாலும். இவ்வலைதளத்தில் தேடப்படும் ஒவ்வொறு விஷயத்தையும் இந்நிறுவனம் பதிவு செய்கிறது. காரணம் இத்தளத்தின் சேவையை மேலும் சிறப்பானதாக ஆக்கவே.

9. உலகின் மிகப்பெரிய "மொழிபெயர்பாளர்களின் தொடர்புகளை" வைத்திருக்கும் நிறுவனமும் இதுவே.

10. 2006 ஆம் ஆண்டு மிக பிரபலாமன "யூடியுப்" என்ற வலைதளத்தை $1.65 பில்லியன் கொடுத்து தனக்கு சொந்தமாக்கி கொண்டது கூகுள். இந்த நிகழ்வு இந்நிறுவனத்தின் சாதனையில் மற்றுமோர் மைல்கல்லாக அமைந்தது. 

Similar News