அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை - 4.29 கோடி பணமும் 519 சவரன் நகையும் பறிமுதல்.!

அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை - 4.29 கோடி பணமும் 519 சவரன் நகையும் பறிமுதல்.!

Update: 2020-11-08 13:37 GMT

தமிழகம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அரசு அலுவலகங்கள் மற்றும் ஊழியர்களின் வீட்டில் கடந்த 1 ஆம் தேதி முதல் மேற்கொண்ட திடீர் சோதனையில் 4.29 கோடி பணமும் மற்றும் 519 பவுன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களில் பணம் அதிக அளவில் புழக்கம் அடைகிறது என்ற குற்றச் சாட்டை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை தொடங்கியது. தமிழகம் முழுவதும் காவல்துறை பல குழுக்களாகப் பிரிந்து 54 அலுவலகங்களில் திடீர் சோதனையை மேற்கொண்டனர். அதன் பேரில் DIG ராதிகா மேற்பார்வையில் சோதனை நடைபெற்றது. நவம்பர் 6 வரை நடைபெற்ற சோதனையில் 4,29,98,892 பணமும் 519 பவுன் தங்க நகையும் மற்றும் 6.5 கிலோ வெள்ளியும் வங்கி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

லஞ்ச ஒழிப்புத்துறை மதுரை மாவட்டம் சமூக நலத்துறை அலுவலகத்தில் நடத்திய சோதனையில் 32,430 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துணை சார்பதிவாளர் பால முருகன் இல்லத்தில் நடத்திய சோதனையில் 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் சுரங்கதுரை இயக்குநர் வீட்டில் நடைபெற்ற சோதனையிலும் ஏராளமான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் 85 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தம்மம்பட்டி சார்பதிவாளர் வீட்டில் மற்றும் அவரது உறவினர் வீட்டிலும் நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களும் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் M பன்னீர் செல்வம் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான பணம், நகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1,04,900 லட்ச பணமும் மற்றும் நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் 38 ஆயிரமும் மற்றும் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 88 ஆயிரமும் மற்றும் தமிழகத்தில் மேலும் பல்வேறு இடங்களில் பணம், நகை, பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு நடைபெற்ற திடீர் சோதனையில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என 14 பேர் லட்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Similar News