துவங்கிய கந்த சஷ்டி திருவிழா சூரிய கிரகணம் நடைபெறுவதால் பக்தர்கள் தரிசிக்கலாமா?
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா துவங்குகிறது. இதை ஒட்டி அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீப ஆராதனை உதயம் மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5:30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். 7:30 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா, காலை 9 மணி அளவில் மூலவருக்கு உச்சக கால அபிசே அபிஷேக ஆராதனை, பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபா ஆராதனை நடக்கிறது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி -தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீப ஆராதனையும் மாலை 3 மணிக்கு மூலவருக்கு தீப ஆராதனையும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆறாம் நாள் வருகிற 30-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மேலும் கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் என்று சூரிய கிரகணம் நடப்பதால் மாலை 4 மணிக்கு நடை சாத்தப்பட்டு கோவில் நடை பக்தர்களுக்காக சாத்தப்படுகிறது.
6.45 மணிக்கு திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடக்கிறது. எனவே சுவாமியை தரிசிக்கும் பக்தர்கள் 6.45 மணிக்கு மேல் கோவிலில் சென்று சாமி தரிசிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடற்கரை பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு வகையில் ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்ட கேமராக்களும் பொருத்தப் பட்டுள்ளன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் கடலில் தடுப்பும் விதவைகள் போடப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஊர்வல காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News