மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல் மந்திரியின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு!
மதுபான கொள்கை ஊழல் புகாரியில் சி.பி.ஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஜாமின் வழங்க வேண்டும் என்று கோரும் டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியாவின் மனுவை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
மதுபான கொள்கை ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சி.பி.ஐ காவல் விதித்த டெல்லி சி.பி.ஐ சிறப்பு கோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தன்னை சி.பி.ஐ கைது செய்ததற்கு எதிராக மனீஷ் சிசோடியாவின் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை தலைமை நீதிபதி சந்திரசேகர் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மணிஷ் சிசோடியா தலைமையில் ஆஜரான மூத்தவக்கீல் அபிஷேக் மனு சிங்வி , ஏழு ஆண்டுகள் சிறை தண்டனைக்கான புகாரில் கைது நடவடிக்கை தேவையற்றது. விசாரணைக்கு மனீஷ் சிசோடியாவின் தொடர்ந்து ஒத்துழைத்து வருகிறார். அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக் கூடியவர் அல்ல என வாதிட்டார். இதே வாதங்களை ஐகோர்ட்டில் வைக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்ததுடன் டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தெரிவித்த அந்த மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்தது.