சர்வதேச விமான நிலையமாக ஒரே மாதத்தில் தரம் உயர்ந்த சூரத் விமான நிலையம்!
குஜராத்தில் உள்ள சூரத் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்ந்துள்ளது.
உள்நாட்டு விமான நிலையமாக இருந்த சூரத் விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சூரத் விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்த நிலையில், ஒரு மாத இடைவேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சூரத் விமான நிலையத்துக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து தளத்தில் சூரத்தை முக்கிய இடமாக மாற்றும் நோக்கத்திலும், அதன் சுற்றுப்புற பகுதிகளை பொருளாதார ரீதியில் மேம்படுத்தும் நோக்கத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மேம்பட்ட விமான சேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையை குறிக்கிறது. பீக் ஹவர்ஸில் 1200 உள்நாட்டு மற்றும் 600 சர்வதேச பயணிகள் தங்கும் வகையில் புதிய முனையத்தின் கட்டிடத்தின் வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் திறனை மூவாயிரம் பயணிகள் வரை விரிவு படுத்துவதற்கான ஏற்பாடுகளும் உள்ளன.
SOURCE :lokmattimes.com