ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் - கொடூர முகத்தை வெளிக்காட்டிய தலிபான்கள்!

Update: 2022-07-26 04:30 GMT

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள சீக்கிய வழிபாட்டு தளங்களில் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. இதனை அடுத்து சீக்கிய குருத்வாராவை மறுசீரமைப்பு செய்திட தலீபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு எடுத்தது.

தலீபான்கள் சிறுபான்மையினருக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நிலைமை சீராகி விட்டது. இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட மதச் சிறுபான்மையினர் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

சீக்கிய குருத்வாராதாக்குதல் நடந்த போது, ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு குருத்வாராவுக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தனர். தாக்குதலில் உண்டான சேத விவரங்களை கணக்கிட ஒரு தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆப்கான் அரசு 7.5 மில்லியன் பணத்தை குருத்வாரா சீரமைப்புக்கு வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் 18 அன்று ஐஎஸ்கேபி பயங்கரவாத குழு காபுலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரு சீக்கியர் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 24ஆம் தேதி அரசு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியுள்ள சிறுபான்மையின மக்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. இங்கு பாதுகாப்பு பிரச்சனைகள் சமரசம் அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Input From: NDTV


Similar News