வசதிகள் மேம்படுத்தப்பட்ட உத்கிரிஸ்ட் ரயில் தாம்பரத்திலிருந்து நாகர்கோயிலுக்கு முதல் பயணத்தை தொடங்கியது - பார்வையற்றோருக்கு பிரெய்லி வசதி அறிமுகம்!

வசதிகள் மேம்படுத்தப்பட்ட உத்கிரிஸ்ட் ரயில் தாம்பரத்திலிருந்து நாகர்கோயிலுக்கு முதல் பயணத்தை தொடங்கியது - பார்வையற்றோருக்கு பிரெய்லி வசதி அறிமுகம்!

Update: 2019-05-10 03:25 GMT

தாம்பரம் - நாகர்கோவிலுக்கு மேம்படுத்தப்பட்ட பெட்டிகள்(உத்கிரிஸ்ட் பெட்டிகள்) அடங்கிய ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றது.


தாம்பரம் - நாகர்கோவிலுக்கு வாரம் மூன்று முறை (திங்கள்,செவ்வாய், புதன்கிழமைகளில்) விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் உத்கிரிஸ்ட் திட்டத்தின் கீழ், பல்வேறு வசதிகள் அடங்கிய பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 


இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புதன்கிழமை இரவு 7.20 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த ரயிலில் இயற்கை காற்றோட்ட வசதியிடன் கூடிய பயோ கழிவறை, செல்லிடப்பேசி சார்ஜிங் வசதி, மேம்படுத்தப்பட்ட படுக்கை, பிரெய்லி முறையில் இடங்கள் அறியும் வசதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Similar News