மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்க முயற்சி - மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவா

மதிய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்க முயற்சிக்கிறது என்று தர்மபுரியில் மத்திய இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் கூறினார்.

Update: 2022-10-10 09:45 GMT

தர்மபுரியை  அடுத்த பழைய தர்மபுரியில் பா.ஜ.க மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.மாநில துணைத்தலைவர் கே.பி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய தலைவர் நாகராஜ் வரவேற்கிறார்.கூட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிறுவர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு பெருமை வாய்ந்த கலாச்சாரங்களை கொண்ட மாநிலம். மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு 58 கோடி வழங்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிவாரண பணிகளுக்காக தர்மபுரி மாவட்டத்திற்கு மட்டும் மத்திய அரசு ஒரு ரூ.1கோடியே 28 லட்சம் நிதி ஒதுக்கியது. தர்மபுரி மாவட்ட மக்கள் திட்டங்கள் மூலம் பயன் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள ஆறு அரசு மருத்துவமனைகளில் பிரதம மந்திரி தேசிய ரத்த சுத்திகரிப்பபு திட்டம் மூலம் ரத்தம் சுத்திகரிப்பு எந்திரங்கள் செயல்பட்டு வருகின்றது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதிட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் தொடர்பான அடையாள அட்டைகள் 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டுக்கு தேசிய சுகாதார திட்டத்திற்காக மத்திய அரசு ரூபாய் 3,226 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. சுகாதாரத் துறையில் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது. தமிழக அரசு மத்திய அரசு நிதியில் ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும்  மத்திய அரசு சின்னங்களையும் வெளியிடுவதில்லை. சுகாதார திட்டங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பரங்களுக்காக தமிழ்நாட்டுக்கு 24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்திற்கும் இந்த விழிப்புணர்வு பணிக்காக 68 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு விளம்பரங்களில் மத்திய அரசின் நிதி என்றும் பிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது.


மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு மறைக்கு முயற்சிக்கிறது. இனிவரும் காலங்களில் இதுபோன்ற செல்கள் நடைபெறாத வண்ணம் அலுவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை ஒதுக்கியது. இப்போது மறுமதிப்பீடு செய்யப்பட்டு தற்போது 1,977 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்காலிகமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டில் தான் உள்ளது .2026 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையும் இவ்வாறு மதிய இணைய மந்திரி கூறினார். கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஐஸ்வர்யம் முருகன், வெங்கட்ராஜ், பிரவீன், மாவட்ட பொருளாளர் சிவகுமார், மாவட்ட செயலாளர் தெய்வ மணி, மாவட்ட துணைச் செயலாளர் சோபன், மாவட்ட துணைத் தலைவர் சிவசக்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இதனை தொடர்ந்து இந்த ஊர் பாப்பாரப்பட்டியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்ட மத்திய இணை மந்திரி பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா ஆலயத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



 


Similar News