புதுச்சேரி : பா.ஜ.க இளைஞர் அணி பொருளாளர் கார் கண்ணாடியை உடைத்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்..! பெரியார் கூட்டத்தின் ஓயாத சட்ட விரோதங்கள்.. !!

புதுச்சேரி : பா.ஜ.க இளைஞர் அணி பொருளாளர் கார் கண்ணாடியை உடைத்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர்..! பெரியார் கூட்டத்தின் ஓயாத சட்ட விரோதங்கள்.. !!

Update: 2020-07-17 13:17 GMT

கந்தசஷ்டி கவசம் குறித்து கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட நாத்திகன் எனும் சுரேந்திரை சென்னை போலீசார் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் பகுதியில் கைது செய்தனர். கந்தசஷ்டி கவசம் குறித்து கொச்சைப்படுத்தி விடியோ பதிவிட்டு இருந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பா.ஜ.க-வினர் மற்றும் இந்து அமைப்புகள் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராகவும் விமர்சனம் செய்த சுரேந்திரனுக்கு எதிராகவும்  போராட்டங்களை நடத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சனம் செய்த சென்னையை சேர்ந்த சுரேந்திரை தமிழக போலீசார் தேடி வந்த நிலையில் அவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த சுரேந்திரை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கடந்த இரண்டு நாட்களாக அடைக்கலம் கொடுத்து இருந்ததாகவும் தகவல் வெளியானது.


கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறு விடியே பதிவிட்ட நாத்திகன் சுரேந்திர் கைது செய்யப்பட்ட பிறகு தகவலறிந்து கோட்டை மேடு பகுதிக்கு பா.ஜ.க இளைஞர் அணி பொருளாளரும், வழக்கறிஞருமான கார்த்திகேயன் தலைமையில் சென்று அடைக்கலம் கொடுத்தது குறித்து கேட்டனர். மேலும் அப்பகுதியில் இருந்த கரும்பலகையில் இந்துக்கள் குறித்து விமர்சனம் செய்து எழுதப்பட்ட வாசகங்களையும் அழிக்க சொன்னார்கள் ஆனால் அங்கிருந்த தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு பா.ஜ.க இளைஞர் அணி பொருளாளர் கார்த்திகேயனின் கார் கண்ணாடியை உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த போலீசார் சமாதானப்படுத்தி கலைய செய்தனர்.

மேலும் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பா.ஜ.க இளைஞர் அணி பொருளாளர் கார்த்திகேயன் அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


கார் கண்ணாடி உடைத்த சம்பவம் குறித்து கதிர் செய்திகளுக்கு தகவல் தெரிவித்த கார்த்திகேயன், தமிழகத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளி எப்படி புதுச்சேரி எல்லையை மீறி வந்து இருக்க முடியும் என்றும் மேலும் தேடப்பட்டு வந்த குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்து இருப்பது குற்றச்செயல் என தெரிவித்தார். 

Similar News