பிரதமர் மோடி - மேக்கரான் சந்திப்பில் நிகழ்ந்த உடன்பாடும் இருநாட்டின் வளர்ச்சி ஒப்பந்தங்களும் !

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடந்த பிரதமர் மோடி மேக்ரான் சந்திப்பில் பேசப்பட்டது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா நேற்று விளக்கமளித்தார்.

Update: 2024-01-27 08:00 GMT

இந்திய குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசியாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் கொடியேற்றம், முப்படைகளின் அணிவகுப்பு, மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன . இந்த கண் கவர் நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் .ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இந்த பேச்சுவார்த்தையில் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக முக்கியமான ராணுவ தளவாடங்களை இணைந்து தயாரிக்கவும் இணைந்த மேம்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதே போல விண்வெளி சைபர் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியமான உதிரி பாகங்களுடன் எச் 125 ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய டாட்டா மற்றும் ஏர்பஸ் இடையே ஒத்துழைப்பு ஏற்றப்பட்டது.

செயற்கைக்கோள் ஏவும் பணிகளில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியாவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மற்றும் பிரான்ஸின் ஏலியன் ஸ்பேஸ் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .இதைத்தவிர காசா போர் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடியும் மேக்ரானும் விவாதித்தனர். மேலும் செங்கடலில் எழுந்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்பாக தங்கள் கருத்துக்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்.இந்த தகவல்களை மத்திய வெளியுறவுத் துறை செயலாளர். விவேக் வாத்ரா நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


SOURCE :DAILY THANTHI

Similar News