நீட் தேர்வால் தகுதியான சிறந்த மருத்துவர்கள் உருவாகின்றனர் - நடிகர் சின்னி ஜெயந்த்!!

நீட் தேர்வால் தகுதியான சிறந்த மருத்துவர்கள் உருவாகின்றனர் - நடிகர் சின்னி ஜெயந்த்!!

Update: 2019-07-25 13:08 GMT

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவத் துறை சார்பில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது இதை நடிகர் சின்னி ஜெயந்த், செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.


சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் சின்னி ஜெயந்த், செயலியை அறிமுகம் செய்து வைத்தார். குடல், கல்லீரல், இரைப்பையுடன் தொடர்புடைய மஞ்சள் காமாலையின் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த விவரங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் அந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளன.


உலகம் முழுவதும் 32 கோடி பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் 28 லட்சம் பேர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.


கொடிய நோய்களில் ஒன்றான மஞ்சள் காமாலை குறித்த உலக விழிப்புணர்வு தினம் வரும் 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.


செயலியை அறிமுகம் செய்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்னிஜெயந்த், நீட் தேர்வுக்கு ஆதரவாகப் பேசினார்.நீட் தேர்வு என்பது மருத்துவ மாணவர்களை மேம்படுத்தும். சிறந்த மருத்துவர்களை மிக சிறந்த மருத்துவர்களாக மாற்றும் என்பது எனது கருத்து என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சாந்திமலர் மற்றும் கல்லீரல், குடல், இரைப்பை துறை தலைவர் ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Similar News