கால்சியம் குறைபாட்டிற்கு முக்கிய காரணங்கள் இதுவாகத்தான் இருக்கும் !
What are the Causes of calcium deficiency?
கால்சியம் என்பது உயிர்வாழ்வதற்கு அடிப்படையாக தேவைப்படும் ஒரு கனிமமாகும். இது உடலுக்கு கட்டமைப்பு ஆதரவை வழங்குகிறது மற்றும் எலும்புகளை உருவாக்குகிறது. நம் உடலில் உள்ள 99% கால்சியம் சத்து, நம் எலும்புகள் மற்றும் பற்களில் உள்ளன. எலும்புகளை வலுவாக வைத்திருக்கவும், ஏராளமான குறிப்பிடத்தக்க செயல்பாடுகளைச் செய்யவும் நம் உடலுக்கு கால்சியம் தேவைப்படுகிறது. உடல் தசைகள் நகரவும், மூளையில் இருந்து வெவ்வேறு உடல் பாகங்களுக்கு செய்திகளை நரம்புகளின் மூலம் அனுப்பவும் கால்சியம் தேவைப்படுகிறது. கால்சியம் பற்றாக்குறை அனைத்து வயதினருக்கும் ஏற்படுகின்றது. கால்சியம் குறைபாடுகளின் காரணமாக நம் உடலில் ரிக்கெட்ஸ், ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற நோய்களை ஏற்படுகின்றன.
கால்சியம் குறைபாட்டின் சிக்கல் குழந்தைகள் மத்தியில் பொதுவானதாகும். கால்சியம் குறைபாடு உடைய மக்களுக்கு உடல் வலி, சோர்வு, மனச்சோர்வு, பல் இழப்பு, தசை வலி மற்றும் கை, கால்களில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. கால்சியம் குறைபாட்டிற்கு மிக முக்கிய காரணம் உட்கொள்ளும் உணவில் கால்சியம் பற்றாக்குறையாகும். இருக்கிறது. அதிகப்படியான உடல் செயல்பாடுகள் மற்றும் அதீத உடற்பயிற்சி கால்சியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. வைட்டமின் D கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் வைட்டமின் D குறைபாடுகளும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. குளிர்பானங்களை கட்டுப்பாடில்லாமல் உட்கொள்வது கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
விளையாட்டுகளில் ஈடுபடும் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதால், மாதவிடாய் நிறுத்தத்தில் கால்சியம் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர். அதிக அளவு கொழுப்பு, சர்க்கரைகள் மற்றும் புரதங்களின் உட்கொள்ளல் கால்சியம் குறைபாட்டை விளைவிக்கின்றன. தேநீர், காபி, குளிர்பானம், உப்புக்கள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. கால்சியம் குறைபாட்டிற்கான சிகிச்சை மிகவும் எளிதானதாகும். கால்சியம் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு கால்சியம் குறைபாடுகள் இருக்கும் போது தினசரி உணவில் கால்சியத்தை சிறிய அளவில் உட்கொள்ளுங்கள். கால்சியத்தை உறிஞ்ச வைட்டமின் D பயனுள்ளதாக இருக்கிறது.
Input & image courtesy:Logintohealth.