சென்னை-சேலம் 'பசுமை வழி சாலை திட்டம்' - 2025'க்குள் முடிக்க அதிரடி திட்டம்

சென்னை-சேலம் இடையிலான எட்டு வழி சாலை திட்டம் 2025ம் ஆண்டிற்குள் முடிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

Update: 2022-05-12 10:22 GMT

சென்னை-சேலம் இடையிலான எட்டு வழி சாலை திட்டம் 2025ம் ஆண்டிற்குள் முடிக்க மத்திய அரசு தயாராகி வருகிறது.


மத்திய அரசின் 'பாரத் மாலா யோஜனா' திட்டத்தில் சென்னை-கொச்சி துறைமுகங்களை இணைக்கும் வகையில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அதில் முதல்கட்டமாக சென்னை தாம்பரம் அருகே படப்பையில் துவங்கி சேலம் வரையிலான 276.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டத்தை அமல்படுத்த அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 25'ம் தேதி 2018ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நில அளவீடு பணி துவங்கிய நிலையில் விவசாயிகள் எதிர்ப்பு தீவிரமானது அவர்களுக்கு ஆதரவாக பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும், சில திரைத்துறையினரும் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்த திட்டம் நிறைவேற்றாமல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த திட்டம் துவங்கக் கூடாது என விவசாயிகள் போர்வையில் சில அரசியல் கட்சியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வார காலத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மீண்டும் 2019 மே 27-ஆம் தேதி மேல்முறையீடு செய்தது அத்துடன் 'எட்டு வழி சாலை திட்டம்' என்பதை 'மத்திய அரசு பசுமை வழி சாலை திட்டம்' என்றும் 'பாரத்மாலா யோஜனா திட்டம்' என்பதை 'சாகர்மாலா திட்டம்' என்றும் மாற்றம் செய்தது.

அதன்படி சுற்றுச்சூழலுக்கு விவசாயிகளுக்கு பாதிப்பு என்று திட்டத்தை நிறைவேற்றுவதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசு மற்றும் எதிர்ப்பாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களை 2020 டிசம்பரில் விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எட்டு வழி சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை அதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரியும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரியும் சேலம் மாவட்ட அயோத்தியபட்டினதில் நிலம் வைத்துள்ள ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி மேல்முறையீடு தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து பசுமைவழிச் சாலை திட்டத்திற்கு பச்சைக்கொடி காட்டினர். தொடர்ந்து லோக்சபாவில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை 2025ல் திட்டம் முழுமை பெறும் எனவும் அறிவித்தது இதனால் தமிழக அரசும் வேறுவழியின்றி திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

எட்டு வழி சாலை பழைய மதிப்பிலான பத்தாயிரம் கோடி தற்போது 12 ஆயிரம் கோடி முதல் 16 ஆயிரம் கோடி ரூபாயாக உயர உள்ளது மேலும் செலவை அதிகரிக்காமல் இருக்க சுற்று வட்ட சாலை குறைப்பு, விவசாயம் பாதிப்பு ஏற்படா வகையில் வனத்தை ஒட்டிய பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலம் வழியாக திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன் சென்னையில் துவங்கும் சாலை சேலத்தில் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை அரியனுரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி முன்பு ஒன்றினையும் படி தயாரிக்கப்பட்டது முன்பு திட்டம் ஆனால் அதில் மாற்றம் செய்து தற்பொழுது மகுடஞ்சாவடி அடுத்தவரை வைகுந்ததில் இணையும்படி வரைபடம் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் இம்மாதத்தில் எட்டு வழி சாலை திட்டம் முழு வடிவம் பெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Source - Dinamalar

Similar News