இந்து கடவுள் அவமதிப்பு விவகாரம் - லீலா மணிமேகலைக்கு சம்மன்

காளி திரைப்படத்திலிருந்து கடவுளை அவமதித்த காரணத்தினால் இயக்குனர் லீலா மணிமேகலை'க்கு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது.

Update: 2022-07-13 09:58 GMT

காளி திரைப்படத்திலிருந்து கடவுளை அவமதித்த காரணத்தினால் இயக்குனர் லீலா மணிமேகலை'க்கு நீதிமன்றம் சம்மன் அளித்துள்ளது.

இடதுசாரி சிந்தனை கொண்ட ஆவணப்பட இயக்குனர் லீலா மணிமேகலை தான் இயக்கிய காளி திரைப்படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டார், அதில் இந்து மத கடவுள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.

இந்து மதக் கடவுளை இழிவுபடுத்திய இந்த போஸ்டர் விவகாரம் பல அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் லீலா மணிமேகலை கைது செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களிலும் நேரிலும் பல போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக பா.ஜ.க தரப்பில் பல இடங்களில் காவல்துறையில் வழக்கு பதிவு செய்ய புகார் தரப்பட்டது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழகம் ஆகிய இடங்கள் மீது இடங்களில் லீலா மணிமேகலை மீது புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் லீலா மணிமேகலையை கைது செய்ய கோரி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது, இந்த மனுவை விசாரித்து நீதிபதி லீலா மணிமேகலை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகுமாறு அவரது தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

Similar News