திரௌபதி முர்மு'விற்கு பெருவாரியான எதிர்கட்சி எம்.எல்.ஏ'க்கள் வாக்களித்த சம்பவம் - யாரெல்லாம் தெரியுமா?

ஜனாதிபதி தேர்தலில் அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ'க்கள்

Update: 2022-07-22 01:57 GMT

ஜனாதிபதி தேர்தலில் அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ'க்கள் பா.ஜ.க வேட்பாளர் திரௌபதி முர்மு'விற்கு வாக்களித்தது எதிர்க்கட்சிகள் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டில் 15 வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பிற்கான தேர்தல் நடைபெற்றது, இந்த போட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சேர்ந்த எஸ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிட்டனர்.



நாடு முழுவதும் இதற்கான தேர்தல் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது நேற்று இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிந்ததில் 50 சதவீதத்துக்கு மேல் ஓட்டுக்கள் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களவை சேர்ந்த எதிர் கட்சி எம்.பி, எம்.எல்.ஏ'க்கள் 107 பேர் திரௌபதி முர்மு'விற்கு வாக்களித்தது எதிர்க்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Source - Dinamalar

Similar News