காலத்திற்கு தேவையான கல்வி முறையில் கவனம் செலுத்தி இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பாடுபடும் மோடி அரசு!
இந்திய மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை காலத்தின் தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் 200 வது பிறந்தநாள் கொண்டாட்டம் அவரது ஊரான குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்திலுள்ள தங்காராவில் நேற்று நடந்தது .இதையொட்டி அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்ட பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
அடிமைத்தனம் மற்றும் சமூக தீமைகளில் இந்தியர்கள் சிக்கி இருந்த வேலையில் சுவாமி தயானந்த சரஸ்வதி பிறந்தார் .நமது மரபு வழி மற்றும் மூடநம்பிக்கைகள் எவ்வாறு நாட்டை மூழ்கடித்து நமது அறிவியல் சிந்தனையை பலவீனப்படுத்தியது என்பதை அவர் எடுத்துரைத்தார் . இந்த சமூக தீமைகள் நமது ஒற்றுமையை தாக்கின . சமூகத்தின் ஒரு பிரிவினர் இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் இருந்து தொடர்ந்து வெளியேறிக்கொண்டு இருந்தனர்.
அந்த நேரத்தில் வேதங்களுக்கு திரும்புமாறு சுவாமி தயானந்த சரஸ்வதி அழைப்பு விடுத்தார். அவர் ஒரு உலக ஞானி மட்டுமல்ல. தேசிய உணர்வின் ஞானியும் கூட. ஆங்கிலேய ஆட்சியாளர்கள் நமது சமூகத் தீமைகளை பயன்படுத்தி நம் மக்களை தாழ்ந்தவர்களாக காட்ட முயன்று சமூக கேடுகளை காரணம் காட்டி அவர்களின் ஆட்சியை சில நியாயப்படுத்திய நேரத்தில் தயானந்த சரஸ்வதியின் வருகை அத்தகையிஸ் அதிகாரங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தியாவுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை அவர் கனவு கண்டார்.
அவரை முன்னோடியாக எடுத்துக் கொண்டு நாம் அனைவரும் இந்த அமிர்தகாலத்தில் இந்தியாவை நவீனத்துவத்தை நோக்கி அழைத்துச் சென்று வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும். இந்திய மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறை காலத்தின் தேவை .ஆரிய சமாஜப் பள்ளிகள் இதற்கான மையமாக இருந்து வருகின்றன. தேசிய கல்விக் கொள்கையின் மூலம் நாடு இப்போது அதை விரிவு படுத்துகிறது .இந்த முயற்சிகளுடன் சமூகத்தை இணைப்பது நமது பொறுப்பாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
SOURCE :DAILY THANTHI