ஸ்கூட்டியில் 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து மகனை மீட்ட அம்மா - நெகிழவைக்கும் சம்பவம். !

ஸ்கூட்டியில் 1400 கிலோ மீட்டர் பயணம் செய்து மகனை மீட்ட அம்மா - நெகிழவைக்கும் சம்பவம். !

Update: 2020-04-10 13:37 GMT

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தாய் 1400 கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டியில் பயணம் செய்து தனது மகனை மீட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இது தற்போது இந்தியாவிலும் ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்துள்ளது.

தெலங்கானா சேர்ந்தவர் ரஸியா பேகம். இவர் 1,400 கிலோ மீட்டர் தூரம் ஸ்கூட்டியில் பயணம் செய்து, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வீட்டிற்கு வர முடியாமல் சிக்கிக் கொண்ட தனது மகன் நிஜாமுதீனை ஆந்திர மாநிலம் நெல்லூர் சென்று மீட்டு வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.


மேலும் அவர் இருக்கும் பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் தன்னுடைய நிலைமையை கூறி ஸ்கூட்டியில் சென்று தனது மகனை மீட்டு வர அனுமதி கேட்டு கடிதம் கொடுத்துள்ளார்.

தாயின்நிலைமையை உணர்ந்த காவல்துறையும் அவர் சென்று வர அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளது. பின்னர் அவர் தனது மகனை மீட்டு வந்துள்ளார்.

Source: https://www.dinamani.com/india/2020/apr/10/telangana-woman-rides-2-wheeler-1400-km-brings-home-teen-son-stuck-due-to-lockdown-3398039.html

Similar News