ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை இலாபத்துக்கு விற்ற பிரபல அண்ணாச்சிக் கடைக்கு சீல் வச்சாச்சி..

ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை இலாபத்துக்கு விற்ற பிரபல அண்ணாச்சிக் கடைக்கு சீல் வச்சாச்சி..

Update: 2020-04-04 03:06 GMT

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டு வருகிறது. கடைகள் நிபந்தனையின் பேரில் திறக்கப்பட்டுள்ளன. மளிகை சாமான்களை வசதியானவர்கள் முடிந்தவரை வாங்கி சேமித்து விட்டார்கள், ஆனால் கஷ்டவாளி மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எம்.ஆர்.பி. விலைக்கு உட்பட்டே விற்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம்,புதுக்கோட்டை என்ற ஊரில் மணி என்பவர் டி.எம்.ஸ்டோர் என்கிற பெயரில் இப்பகுதியில் பிரபலமான மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு அண்ணாச்சி கடை என்கிற செல்ல பெயர் உண்டு. இவர் அதிக பட்ச சில்லறை விற்பனை விலையுள்ள 10 ரூபாய் மஞ்சள் பொடியை 30 ரூபாய்க்கும், 20 ரூபாய் மதிப்புள்ள சிறிய ரக தேங்காயை 40 ரூபாய்க்கும், சர்க்கரை,பருப்பு உள்ளிட்ட பல பொருள்களையும் ஏகபோக விலையில் விற்று வருவதாக புகார்கள் பல வந்தன.

அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்ததில் பல தில்லுமுல்லுகள் தெரிய வந்ததால் உரிமையாளர் மணி அண்ணாச்சியிடமிருந்து சாவியை அதிகாரிகள் கைப்பற்றியதுடன், கடைக்கு பெரிய பூட்டு போட்டனர். அத்துடன் வெள்ளை துணியால் பூட்டை சுற்றி அரசு முத்திரையால் சீல் வைத்து, கடையை தொடர்ந்து நடத்தவும் தடை விதித்தனர்.

மேலும் அதிகாரிகள் இது போன்ற தவறுகள் நடந்தால் உடனே தெரியப்படுத்தும் படியும் பொது மக்களை கேட்டுக் கொண்டனர்.

https://www.polimernews.com/dnews/

https://www.polimernews.com/dnews/105810/அண்ணாத்த-கடை-இழுத்து-பூட்டி-சீல்---கூடுதல்-விலையால்நடவடிக்கை  

Similar News