சீனாவை நெருங்கிய உலகின் சக்திவாய்ந்த புயல்
சீனாவை நெருங்கிய உலகின் சக்திவாய்ந்த புயல்.ஜப்பானிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.
சீனாவை 'ஹின்னம்னோர் 'என்கின்ற சக்திவாய்ந்த புயல் அச்சுறுத்தி வருகிறது. இந்த புயல் 2002ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த புயலாக கருதப்படுகிறது.
ஹின்னம்னோர் புயல் சீனாவை நெருங்கி உள்ளது என்றும் அதை எதிர்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது 175 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் சீனாவில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது .இதை சீனாவில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.சீனாவின் கிழக்கு பகுதியில் புயல் கரையை கடக்கும் என்பதால் அங்குள்ள நகரங்களில் படகு மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன .மீட்புப் பணிகளுக்கு உதவுதல், மற்றும் ஆபத்தான பகுதிகளில் இருந்து போக்குவரத்தை வழிநடத்துதல் போன்ற பணிகளுக்காக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தைவான் மற்றும் கொரிய தீபகற்பத்தில் இந்த புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஜப்பானின் தெற்கு ஒகினாவா தீவில் படகு மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன .ஆபத்தான பகுதிகளில் மக்களை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆபத்து நிறைந்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.