மகாராஷ்டிரத்தில் ஆட்சியை பிடித்தது பா.ஜ.க - அடுத்து என்ன?
மகாராஷ்டிரா புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா புதிய முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் நாளை பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்களிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற மறுத்த நிலையில் உத்தவ் தாக்ரே தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உடனடியாக ராஜ்பவன் சென்றவர் ஆளுநர் பகத்சிங் கோஷியார் அவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர் மாற்று ஏற்பாடு செய்யும் வரை உத்தவ் தாக்ரே முதலமைச்சராக தொடருமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் மாநில பா.ஜ.க தலைவர் தேவேந்திர பாட்னாபிஸ் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷின்டே'வுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பா.ஜ.க மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டில் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினர்.
இதனை அடுத்து ஆட்சி அமைப்பது குறித்து இன்று முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் கூறினார். இந்நிலையில் முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்ததால் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாது.
ஆளுநரை என்று சந்திக்கும் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க உரிமை கோருவார், என்று தமக்கு ஆதரவளிக்கும் எம்.எல்.ஏ'க்களின் கடிதத்தை அவர் ஆளுநரிடம் வழங்குவார் எனவும் கூறப்படுகிறது.
ஆளுநர் அழைப்பு விடுக்கும் நிலையில் நாளை அவர் முதலமைச்சராக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர், பதவியேற்கும் நாளில் வருமாறு சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ'க்களுக்கு மகாராஷ்டிரா பா.ஜ.க தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை பட்டாபிஸ் மற்றும் பா.ஜ.க'வினர் முடிவு செய்வார்கள் எனவும் அவர் கூறினார்.
படம் - ANI