உண்டியல் காணிக்கை வரலாற்றில் உச்சத்தை தொட்ட திருப்பதி ஏழுமலையான் - ஒரே நாளில் இத்தனை கோடியா?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் உண்டியல் வசூலாகி இந்த ஆண்டில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

Update: 2022-07-05 13:57 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் உண்டியல் வசூலாகி இந்த ஆண்டில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருப்பதியில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில் தற்பொழுது கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன, இதன் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன.

தற்பொழுது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பிரார்த்தனை நிறைவேற்றுவதற்காக உண்டியலில் சராசரியாக 4 கோடி ரூபாய் அளவிற்கு ஏழுமலையான் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பதியில் நேற்று 77,097 பேர் பக்தர்கள் தரிசனம் செய்தனர், 38,267 பேர் முடி காணிக்கை செலுத்தினர் 6 கோடியே 18 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை வசூல் ஆனது.


திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி முதல்முறையாக 6 கோடியை 28 லட்ச ரூபாய் கோயில் உண்டியல் வருவாயாக கிடைத்தது. தற்பொழுது 6 கோடி 18 லட்சம் கிடைத்துள்ளது இரண்டாவது அதிகபட்சமாகும்.

Similar News