₹2,940 கோடி, 15.95 லட்சம் கணக்குகள்! தொடர்ந்து செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்!

₹2,940 கோடி, 15.95 லட்சம் கணக்குகள்! தொடர்ந்து செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த தமிழகம்!

Update: 2019-10-13 07:07 GMT

இந்தியாவிலேயே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், தமிழகத்தில் 15.95 லட்சம் சேமிப்பு கணக்குகள் மூலம் ரூபாய் 2940 கோடி முதலீடு செய்யப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.


மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம்(சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்). இத்திட்டம் தான் தமிழ் நாட்டில் செல்வ மகள் திட்டமாக செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்தக் கணக்கை அனைத்து அஞ்சலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் துவங்க முடியும். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 இக்கணக்கில் செலுத்தப்பட வேண்டும்.


மொத்தம் 14 ஆண்டுகள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும் வரை பணம் செலுத்த வேண்டும். ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1,000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 1,50,000 ரூபாய் வரை வைப்புத்தொகையாகச் செலுத்தலாம். செலுத்தும் தொகைக்கு வட்டியாக தொடக்க காலத்தில் 9.1 சதவீத வட்டி வழங்கப்படும்.


இந்தியாவிலேயே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், தமிழகத்தில் 15.95 லட்சம் சேமிப்பு கணக்குகள் மூலம் ரூபாய் 2940 கோடி முதலீடு செய்யப்பட்டு முதலிடம்.


Similar News