புதிய உச்சம் தொட்ட தக்காளி விலை: மத்திய அரசு செய்த நடவடிக்கை!
தக்காளியின் விலை புதிய உச்சத்தை தொட்டது. ஒரு கிலோ ரூபாய் 250க்கு விற்பனை செய்யப்பட்டது.
பருவ மழையின் எதிரொலியால் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று தக்காளி விலை புதிய உச்சம் தொட்டது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தின் ஹாபூர் நகரில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 250 விற்பனை ஆனது.
அகில இந்திய அளவில் தக்காளியின் சராசரி விலை கிலோவுக்கு ரூபாய் 117 ஆக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விலை ஏற்றத்தால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக டெல்லி ,பாட்னா, லக்னோ போன்ற நகரங்களில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 90க்கு மத்திய அரசு விற்பனை செய்தது.
SOURCE:DAILY THANTHI