நாளை மாலை விண்ணில் பாய்கிறது ஜிஐசாட் - 1 என்ற அதிநவீன செயற்கைக்கோள்!

நாளை மாலை விண்ணில் பாய்கிறது ஜிஐசாட் - 1 என்ற அதிநவீன செயற்கைக்கோள்!

Update: 2020-03-04 08:21 GMT

ஜி.எஸ்.எல்.வி., - எப் 10 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ வடிவமைத்துள்ள ஜிஐசாட் - 1' என்ற அதிநவீன செயற்கைக்கோளை நாளை விண்ணில் பாய்கிறது, புவி கண்காணிப்பு, கடல் ஆய்வு, விவசாயம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படும் இந்த செயற்கைக்கோள் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, நாளை மாலை, 5:43 மணிக்கு விண்ணில் பாய்கிறது.


இதற்கான கவுன்ட்டவுன் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது,இந்த செயற்கைகோள் பேரிடர் காலங்களில் மிக உதவிகரமாக இருக்கும் எனவும் இதில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராவின் மூலம் பூமியை துல்லியமாக புகைப்படம் எடுத்து அனுப்பும் எனவும் மேலும் இயற்கை பேரிடர்களின் போது முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க இது உதவிகரமாக இருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Similar News