தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதி கைது -பா.ஜ.க செய்தி தொடர்பாளர் தகவலால் பரபரக்கும் தமிழக அரசியல்

தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதி கைது -பா.ஜ.க செய்தி தொடர்பாளர் தகவலால் பரபரக்கும் தமிழக அரசியல்

Update: 2019-09-14 02:21 GMT

தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதி ஒருவர் கைது விரைவில் கைது செய்யப்படுவார் என பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறியுள்ளது . தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் வந்த பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா இராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வின்குமார் உபாத்யாயா,


’இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள். அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ப.சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும் விரைவில் கைது செய்யப்படுவார்’’ என கூறினார்,


இந்நிலையில் அஸ்வின் குமார் உபாத்யாயா கூறியது தமிழக அரசியலில் மிக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு தமிழகத்தை சேர்ந்தவர் யார் கார்த்திக் சிதம்பரமா இல்லை கனிமொழி, ஆ.ராசாஎன சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது ,


அதுமட்டுமில்லமால் தி.மு.க-வின் முக்கிய புள்ளிகள் தான் கைது செய்யப்படுவார்கள் என கூறுகின்றது சி.பி.ஐ, ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளில் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி அமைத்து மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்து தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்தன. அ.தி.மு.க வை பொறுத்தவரை அந்த கட்சியினர் இந்தப்பட்டியலில் இல்லை எனக் கூறப்படுகிறது.


திகைப்பில் தி.மு.க உள்ளதாக வட்டாரங்கள் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றது


Similar News