இந்து அமைப்புகளை போலீசார் துணை கொண்டு நசுக்க முயற்சிப்பதா? - எஸ். வேதாந்தம் , ஆர்.ஆர்.கோபால் ஜி கண்டனம்.
இந்து அமைப்புகளை போலீசார் துணை கொண்டு நசுக்க முயற்சிக்கும் தமிழ்நாடு அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது என்றும் ஜனநாயக விரோதமாக கைது செய்யப்பட்டுள்ள விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் எஸ் வேதாந்தம் ஆர்.ஆர்.கோபால்ஜி கூறியுள்ளனர்.
தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் நிறுவனர் எஸ்.வேதாந்தம் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் ஈரோடு கோட்ட செயலாளர் சபரிநாதனை பள்ளிபாளையம் போலீசார் அதிகாலை 4 மணிக்கு வீடு புகுந்து கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. கண்டிக்கத்தக்கது. ஒரு புகைப்படத்தை வாட்ஸப்பில் பகிர்ந்தார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்து மதத்தையும், இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்தி பேசும் போக்கு அதிகரித்துள்ளது. தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா எம்.பி இந்துக்கள் குறித்து இழிவாக பேசினார். தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் இந்து வழிபாட்டு முறைகளை விமர்சித்தார் .ஆளும் தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் தொடர்ந்து இந்துக்கள் நம்பிக்கையை புண்படுத்தி வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில அரசியல் கட்சிகள் கூட இந்துக்களையும் இந்து மதத்தையும் வரம்பில்லாமல் இழிவு படுத்தும் வேலையை தொடர்ந்து செய்து வருகின்றன . திராவிடர் கழகம் ,அதன் துணை அமைப்புகள் சமூக வலைதளங்களில் இந்து தெய்வங்களை பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசுவது அதிகரித்துள்ளது. அப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையில் புகார் கொடுத்தாலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் தி.மு.க வினரையோ அதன் கூட்டணி கட்சியினரையோ பிற மதம் சார்ந்த தலைவர்களையோ விமர்சிப்பவர்கள் புகார் கொடுப்பதற்கு முன்பாகவே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் 'இந்து மதத்தை இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் 'என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் சார்பில் நாமக்கலில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையிடம் சபரிநாதன் மனு கொடுத்து மறுநாளே அவர் கைது செய்யப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.
இதன் மூலம் சபரநாதனின் கைது அரசின் படிவாங் நடவடிக்கை என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது இந்த அமைப்புகளை காவல்துறை துணை உண்டு நசுக்கு முயற்சிக்கும் தமிழ்நாடு அரசின் போக்கை தமிழ்நாடு விஸ்வ இந்து பரிசத் கடமையாக கண்டிக்கிறது இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு ஜனநாயக விரோதமாக கைது செய்யப்பட்டுள்ள சபரிநாதனை உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் இந்து மதத்தையும் தெய்வங்களையும் தொடர்ந்த அவமதிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து முதலமைச்சர் கூறி வருவது போல "இது அனைவருக்குமான அரசு" என்பதை நிரூபிக்க வேண்டும்.