சீன அதிபர், பிரதமர் மோடிக்காக 200 வகை தமிழர் உணவு வகைகள் - தக்காளி ரசத்தை ருசித்து ரசித்து பருகிய சீன அதிபர்!

சீன அதிபர், பிரதமர் மோடிக்காக 200 வகை தமிழர் உணவு வகைகள் - தக்காளி ரசத்தை ருசித்து ரசித்து பருகிய சீன அதிபர்!

Update: 2019-10-14 04:54 GMT

சீன அதிபருக்கு மாமல்லபுரம் கடற்கரை பகுதியிலேயே இரவு விருந்தினை பிரதமர் நரேந்திர மோடி அளித்தார். இந்த விருந்துக்கான சமையல் இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே தொடங்கியது. அப்போது, அந்த கடற்கரை பகுதியே சமையல் மணம் அப்பகுதி முழுவதும் பரவியதாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தெரிவித்தனர்.


இரவு விருந்தில் முற்றிலும் தென்னிந்திய உணவு வகைகளே இருந்தன. குறிப்பாக, தக்காளி ரசம், கையால் அரைத்த மசாலாவில் தயாரிக்கப்பட்ட சாம்பார், கடலை குருமா, கவினி அரிசி அல்வா என தமிழகம் சார்ந்த 200 வகையான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் தக்காளி ரசத்தை ருசித்து ரசித்து சீன அதிபர் மற்றும் பிரதமர் மோடி சாப்பிட்டதாக தகவல் கல் கூறின.


Similar News