கொரோனா ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மத்திய அரசு அதிரடி உத்தரவு

கொரோனா ஊரடங்கை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மத்திய அரசு அதிரடி உத்தரவு

Update: 2020-04-03 02:37 GMT

கொரோனா நோய் தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியை கடைபிடித்து தங்களின் உயிரை பாதுகாத்து கொள்ள மத்திய அரசு ஊரடங்கை அமல்படுத்தியது

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் தேவை இன்றி வெளியில் நடமாடினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தை பயன்படுத்த மாநிலங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர்அஜய் குமார் பல்லா எழுதியுள்ள கடித்தில் கூறியுள்ளார்

ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது பேரிடர்சட்ட பிரிவு 51,60 ன் படியும் இந்திய தண்டனை சட்டம்188 ன் படியும் நடவடிக்கை எடுக்கலாம்

அரசின் உத்தரவுகளை மதிக்காமல் உத்தரவை மீறுவோர் மீதுஓராண்டு சிறை அபராதமும் விதிக்கலாம் 

அரசின் உத்தரவுகளை மதிக்காத கடமையை செய்ய மறுக்கும் அதிகாரிகளுக்கு ஓராண்டு தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது

இனி வரும் காலங்களில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்க படுகிறது.

 

Similar News