உதய்பூர் கொலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு? என்.ஐ.ஏ தீவிர விசாரணை!

Update: 2022-06-30 09:51 GMT

ராஜஸ்தானில் இந்து டைலரை இஸ்லாமிய கும்பல் ஒன்று தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இரண்டாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் டைல் கடை வைத்து நடத்தி வந்தவர் கன்னையா லால். இவரை இஸ்லாமிய கும்பல் ஒன்று தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்ததை தொடர்ந்து இதுவரையில் 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், டைலர் கொலை சம்பவத்தை கண்டிக்கின்ற வகையில் இன்றும் இரண்டாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படுகொலையை விசாரிப்பதற்காக ராஜஸ்தான் அரசு புலனாய்வு பிரிவு ஒன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில், டைலர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் இளைஞர் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு சென்று வந்துள்ளார். அவர் பாகிஸ்தானை சேர்ந்த தாவட் இ இஸ்லாம் என்கின்ற அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் ராஜஸ்தான் மாநில போலீஸ் டி.ஜி.பி. கூறியுள்ளார்.

இதற்கிடையில் கன்னையா லாலுக்கு சமூக வலைதள பதிவை தொடர்ந்து கொலை மிரட்டல் வந்ததாகவும், இதனால் ஒரு வாரமாக கடைக்கு வராமல் வீட்டிலேயே இருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமைதான் வந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். தற்போது இந்தியாவில் நடைபெறும் கொலைக்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற கும்பல்களை அரசு ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லை என்றால் நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்கள்.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News