குடியுரிமை சட்ட நகலை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

குடியுரிமை சட்ட நகலை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு!

Update: 2019-12-14 05:37 GMT

அண்டை நாடான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்,வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத பிரிவினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன இந்த திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த பிறகு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியுள்ளார் இந்த நிலையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



 அப்போது சட்ட நகலை உதயநிதி ஸ்டாலின் கிழித்து எறிந்தார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் போராட்டத்திலும் ஈடுபட்டார். அப்போது  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவினரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் குடியுரிமை சட்ட நகலை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Similar News