370 ரத்தில் தலையிட ஐ.நா மறுப்பு! பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு தர்ம அடி!!

370 ரத்தில் தலையிட ஐ.நா மறுப்பு! பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு தர்ம அடி!!

Update: 2019-08-09 13:00 GMT


டாக்டர் அம்பேத்கரின் கடும் எதிர்ப்பையும் மீறி, 1954-இல், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கினார். இதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு உருவாக்கப்ட்டது. பின்னர் அதனுடன் 35ஏ பிரிவு இணைக்கப்பட்டது.


மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு அதிகாரங்களை காஷ்மீருக்கு வழங்கியதன் மூலம் முன்னாள் பிரதமர் நேரு, தீராத பிரச்சினைக்கும், முஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மிகப்பெரிய  அடித்தளத்தையும் அமைத்து இருந்தார். 


காஷ்மீரில் நமது ஜனாதிபதிகூட நிலம் வாங்க முடியாது என்பது உள்பட ஏராளமான சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டன.


இது மட்டுமல்ல, இந்த சிறப்பு அந்தஸ்து மூலம், காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்கள், காஷ்மீரின் இரண்டாம் தர குடி மக்களாக ஆக்கப்பட்டனர்.





அவர்களுக்கு காஷ்மீர் அரசு வேலை வாய்ப்பில் இடமில்லை. அவர்களின் பிள்ளைகளுக்கு தொழில்நுட்ப கல்லூரிகளில் படிக்க அனுமதி கிடையாது. சட்ட கல்லூரிகளில் அவர்களின் பிள்ளைகள் படிக்க அனுமதி கிடையாது. உள்ளாச்சி மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் ஓட்டு உரிமை கிடையாது. 


காலம் காலமாக அவர்கள் மலம் அள்ளும் தொழில் மட்டுமே செய்து வந்துள்ளனர். வேறு வேலைகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.


இந்தியாவில் உள்ள பட்டியலின மக்களுக்கு கிடைக்கின்ற எந்த சலுகையும், இட ஒதுக்கீட்டு உரிமையும் காஷ்மீரில் உள்ள பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்டன. 


காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும், தேசிய நீரோட்டத்தில், இந்திய ஒருமைப்பாட்டில் காஷ்மீரும் இணைய வேண்டும் என்ற குரல்கள் கட்சி பாகுபாடின்றி தேச ஒற்றுமைக்காக ஏறக்குறைய 70 ஆண்டுகளாக பல்வேறு காலகட்டங்களில் ஒலித்து வந்தது.


இப்போது அந்த தனி அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவை, துணிச்சல் மிக்க நரேந்திர மோடி அரசு எடுத்துள்ளது.


காஷ்மீருக்கான தனி அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலம், அது தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது ஒருபுறம் இருக்க, அங்குள்ள 11 லட்சத்திற்கும் அதிகமான பட்டியலின மக்களுக்கு விடுதலை கிடைத்து உள்ளது.


370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது இந்தியாவின் உள் விவகாரமாக இருந்தாலும், இதுவரை காஷ்மீரை காரணமாக வைத்து முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களை காஷ்மீரில் ஊடுருவச் செய்து நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இது தொடர்பாக ஐ.நா சபையில் பாகிஸ்தான் புகார் அளித்துள்ளது. இதனை ஐ.நா.சபை நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக பதிலளித்துள்ள ஐ.நா. சபை பொது செயலாளர் அந்தோணியோ கட்டாரஸ்,”சிம்லா அமைதி ஒப்பந்தத்தின்படி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினைகளை அவர்களே தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். 3-வது மத்தியஸ்தத்திற்கு இதில் இடமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதன் மூலம் காஷ்மீர் தொடர்பான பிரச்சினையில் ஐ.நா தலையிடாது என்பதை திட்டவட்டமாக  தெரிவித்துவிட்டனர்.


Similar News