கேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு !! பாஜக எழுச்சிதான் காரணமா ?

கேரளாவில் வரலாறு காணாத வாக்குப்பதிவு !! பாஜக எழுச்சிதான் காரணமா ?

Update: 2019-04-24 13:37 GMT


கேரளாவில் 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகமான அளவு வாக்குப்பதிவு ஆகியுள்ளது. 77.68 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட 74.04 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.


எப்போதும் அங்கு பிரதானமாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே மோதும் என்பதால் சுவாரசியம் இருப்பதில்லை. ஆனால் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் நாடெங்கும் “மோடி அலை” வீசியது. இதற்கு கேரளமும் தப்பவில்லை. அங்கு ஒரே தொகுதியில் வெற்றி பெற்றாலும் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று 3 ம் இடத்தை பெற்றது.


 இந்த நிலையில் ஐயப்பன் கோவில் விவகாரம், மோடி அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மோடி அரசின் நலத்திட்டங்கள் போன்றவை பாஜகவின் அடித்தளத்தை அங்கு விரிவு படுத்தியுள்ளது. பாஜக கூட்டங்களில் அளவுக்கதிகமாக கூட்டம் சேருகிறது.


அங்குள்ள இந்து இயக்கங்களும் பாஜகவுடன் கை கோர்த்துள்ளது. பல சிறிய கட்சிகள் பாஜகவுடன் கை கோர்த்துள்ளன. சமீபத்தில் மோடி, அமீத்ஷா பங்கேற்ற கூட்டங்களுக்கு பிரம்மாண்ட கூட்டம் கூடியது.


இந்த நிலையில் பாஜக மீதான எதிர்பார்ப்பால்தான் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக கருத்து கேட்ட செய்தியாளர்களிடம் பினராயி விஜயன், அமைதியை இழந்து கோபத்தை காட்டியுள்ளார் என்றும் செய்திகள் இன்று வெளியாகியுள்ளன. பாஜக வளர்ச்சியாலும், காங்கிரசின் போக்காலும் ஏற்கனவே பினராயி விஜயன் கோபமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Similar News