27 ஆண்டு சபதம்! பால், பழம் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருந்த பெண் அயோத்தி தீர்ப்பு வந்ததை அடுத்து சபதத்தை முடித்துக்கொண்டார்!

27 ஆண்டு சபதம்! பால், பழம் தவிர வேறு எதுவும் சாப்பிடாமல் இருந்த பெண் அயோத்தி தீர்ப்பு வந்ததை அடுத்து சபதத்தை முடித்துக்கொண்டார்!

Update: 2019-11-13 05:24 GMT

அயோத்தியில்  நிலம்  வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அரசியல் சாசன அமர்வு, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது, அந்த நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், அந்த இடத்தை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  இதனிடையே 27 ஆண்டுகளாக பால் பழம் தவிர வேறு எதுவும் உண்ணாமல் ராமர் கோயிலுக்காக, ராமர் பக்திக்காக ஊர்மிளா சதுர்வேதி மேற்கொண்ட சபதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி, 81. இவர் சமஸ்கிருத ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 'அயோத்தி விவகாரம் முடிவுக்கு வரும் வரை, பால் மற்றும் பழங்கள் தவிர, வேறு எதுவும் உண்ண மாட்டேன்' என 1992ல் சபதம் மேற்கொண்டார். 27 ஆண்டுகளாக தன் சபதத்தை கட்டிக் காத்து வருகிறார். இந்நிலையில் அயோத்தி விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து தன் சபதத்தை முடித்துக் கொள்வதாக ஊர்மிளா சதுர்வேதி அறிவித்துள்ளார். மேலும் நுாற்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் இழுத்தடித்து வந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு நன்றி தெரிவித்து, அவர் கடிதம் எழுத போவதாக அறிவித்து உள்ளார்.


Similar News