நெல்லை கண்ணன் கைது: பீதியில் வைகோ, சீமான், வேல்முருகன், திருமாவளவன், கி.வீரமணி!

நெல்லை கண்ணன் கைது: பீதியில் வைகோ, சீமான், வேல்முருகன், திருமாவளவன், கி.வீரமணி!

Update: 2020-01-02 07:56 GMT

திருநெல்வேலி மேலப்பாளயத்தில் கடந்த 29-ஆம் தேதி எஸ்டிபிஐ என்ற முஸ்லிம் மதவாத அமைப்பு சார்பில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்புக் கூட்டம் நடந்தது. இதில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் குறித்து அவதூறாக பேசினார்.


இதனால் கொதித்தெளுந்த தேசபக்தர்கள், நெல்லை கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி புகார் அளித்தனர். பல்வேறு இடங்களில் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். பாஜகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


மேலும் நெல்லை கண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நாடகமாடி, தனியார் முஸ்லிம் அமைப்பின் ஆம்புலன்ஸ் மூலம், தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் அங்கும் அவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்ததால், அங்கிருந்து வெளியேறிய நெல்லை கண்ணன் தலைமறைவானார்.


இந்தநிலையில், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.


இதுகுறித்து கருத்து தெரிவித்த வைகோ, “நெல்லை கண்ணன் அந்த இடத்தில் அப்படிப் பேசியிருக்க கூடாது. அவர் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்ககூடாது. அது தவறானது” என்று வைகோ கூறினார்.
நெல்லை கண்ணன் கைதை தொடர்ந்து பிரிவினை வாதம் பேசித்திரியும் சீமான், வேல்முருகன், திருமாவளவன், கி.வீரமணி போன்றவர்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.


Similar News