4 மணி 20 நிமிடத்தில் டெல்லி- கான்பூர் பயணம் - சோதனை ஓட்டத்தை சாதனையாக்கிய 'வந்தே பாரத்' ரயில்.!

4 மணி 20 நிமிடத்தில் டெல்லி- கான்பூர் பயணம் - சோதனை ஓட்டத்தை சாதனையாக்கிய 'வந்தே பாரத்' ரயில்.!

Update: 2019-07-24 06:41 GMT

டெல்லி- கான்பூர் வழித்தடத்தில் செல்லக்கூடிய, நாட்டின் அதிவேக ரயில்களுள் ஒன்றான வந்தே பாரத் ரயில், தனது இரண்டாவது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.


ரயில் பயணிகளின் பயண நேரத்தை கணிசமாக குறைக்கும் நோக்கில் மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் எனும் அதிவேக சொகுசு ரயிலின் சேவை, டெல்லி வாரணாசி இடையே கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இதையடுத்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை வழங்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் டெல்லியிலிருந்து உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூருக்கு ரயில் சேவை வழங்க திட்டமிடப்பட்டு முதல் சோதனை ஓட்டமும் நடைபெற்றுள்ளது.


இந்நிலையில் அதற்கான இரண்டாவது சோதனை ஓட்டம் தற்போது தொடங்கி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஃப்ரீசர் வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயிலின் சேவை தொடங்குவதன் மூலம் டெல்லியிலிருந்து பயணிக்கும் பயணிகள் 4 மணி 20 நிமிடத்திற்குள் கான்பூரை அடையலாம் எனவும் கூறப்படுகிறது.


Similar News