ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு - கர்நாடகத்தில் பரபரப்பு
கர்நாடகா அரசின் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
கர்நாடகா அரசின் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
கர்நாடகத்தில் பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் இன்று காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியின் போதும், பள்ளி, கல்லூரிகளுக்கு வரும்போதும் இஸ்லாமிய பெண்கள் தங்கள் மத வழக்கப்படி தலையில் முக்காடு அணிந்துள்ளனர். இதற்கு கர்நாடக அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடைவிதித்தது. உச்சநீதிமன்றம் கடந்த 10 நாட்கள் இருதரப்பின் வாதங்களைக் கேட்ட பின்னர் தீர்ப்பு ஒத்திவைத்து இன்று வழங்குகிறது. இதனால் கர்நாடகம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.