மரபணு மாறிய கடுகு பயிரிடக் கடும் எதிர்ப்பு - சென்னையில் கூட்டம் நடந்தேறியது

மரபணு மாறிய கடுகு பயிரிடக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Update: 2022-11-06 11:14 GMT

மரபணு மாறிய கடுகு பயிரிடக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மரபணு மாற்றப்பட்ட கடுகு விதை உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பு சார்பில் சென்னை பெசன்ட் நகர், ஏலியட்ஸ் கடற்கரையில் நேற்று மாலை விழிப்புணர்வு நடை நிகழ்ச்சி நடந்தது.

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனத்து கூறியதாவது, 'இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை உற்பத்தி செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணு பொறியியல் மதிப்பீட்டு குழு அனுமதி அளித்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிர் சாகுபடி அடுத்த 20 ஆண்டுகளை துவங்கிவிடும்.

இது ஆபத்தானது, மரபணு மாற்றப்பட்ட கடுகு சாகுபடி அனுமதிக்கும் வேலைகள் நிறுத்த வேண்டும்' என அவர் கூறினார்



Source - Dinamalar

Similar News