நடிகர் விஷால் நடிக்கும் 'சக்ரா' படத்தின் உற்சாகமான அறிவிப்பு.!

நடிகர் விஷால் நடிக்கும் 'சக்ரா' படத்தின் உற்சாகமான அறிவிப்பு.!

Update: 2020-06-20 13:31 GMT

தற்போது நடிகர் விஷால் நடித்து கொண்டிருக்கும் படங்கள் 'துப்பறிவாளன் 2' மற்றும் சக்ரா. துப்பறிவாளன் 2 படம் முடிய உள்ள நிலையில் இயக்குனர் மிஷ்கின்க்கும் விஷாலுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த படத்தில் இருந்து மிஷ்கின் விலகிவிட்டார்.

இதை தொடர்ந்து மீதி இருக்கும் படத்தை விஷாலே இயக்கி வருவதாக கூறுகின்றனர் மற்றும் இந்த படம் ஊரடங்கு முடிந்த உடன் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதன் பிறகு விஷால் நடித்து கொண்டிருக்கும் படம் சக்ரா. இந்த படத்தை எம்.எஸ் ஆனந்தன் இயக்கி வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு அதிகபட்சமாக முடிவு அடைந்துள்ளது. இந்த ஊரடங்கு சமயத்தில் போஸ்ட் புரடொக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


இந்நிலையில் 'சக்ரா' படத்தின் உற்சாகமான அறிவிப்பு ஒன்று வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தி உள்ளது.

இந்த படத்தில் விஷால், ரெஜினா, ஷ்ராதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர் மற்றும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  

Similar News