பொன்னாருக்கு நாங்க ஓட்டு போடல! இனிமேல் அந்த தப்பை ஒரு போதும் செய்ய மாட்டோம்!! குமரி மாவட்ட மீனவ பெண்கள் நெகிழ்ச்சி

பொன்னாருக்கு நாங்க ஓட்டு போடல! இனிமேல் அந்த தப்பை ஒரு போதும் செய்ய மாட்டோம்!! குமரி மாவட்ட மீனவ பெண்கள் நெகிழ்ச்சி

Update: 2019-08-11 09:24 GMT

குமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சிறைகளில் சிறைபட்ட 296 மீனவர்களை அங்கு பாஜக எம்பியாக இருந்த பொன் இராதாகிருஷ்ணன் மீட்டுவந்துள்ளார். இவரது முயற்சியால் குமரி மாவட்டத்தில் சுமார் 4 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பிரதமர் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மோடியின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏராளமானோருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான சாலை வசதிகள், மேம்பால வசதிகள் செய்து தந்துள்ளார்.இவை எதையுமே மதம் பார்த்து இந்த மனிதன் செய்யவில்லை. கட்சி, மதம் பாராமல் அனைவருக்கும் சேவை செய்தார்  


இவை அனைத்தையும், இந்த மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அவருக்கு ஓட்டு போடக்கூடாது என்று உள்நோக்கத்தோடு பாதிரியார்கள் சொன்னதை கேட்டு சென்ற மக்களவை தேர்தலில் முடிவெடுத்தார்கள் என்றால் மதவெறி எந்த அளவிற்கு குமரி மாவட்டத்தில் தூண்டப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். 


இந்த நிலையில் குமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த ஜோசப் சேவியர், கென்னடி, கிங்க்ஸ்டன், கிறிஸ்டியன் ஆகிய நான்கு மீனவர்கள் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். அப்போது பஹ்ரைன் நாட்டு பாதுகாப்பு படை சந்தேகத்தின் பேரில் அந்த நான்கு பேரையும் சென்ற பிரவரி மாதம் 17 ந்தேதி கைது செய்து பஹ்ரைனில் உள்ள அசிரின் சிறையில் வைத்துள்ளனர். இது வரை அவர்கள் விடுவிக்கப்படவில்லை.


இந்த நிலையில் ஜோசப் சேவியரின் மனைவி உட்பட பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களின் குடும்பத்தினர் மீனவர்களை சிறையிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஜோசப் சேவியர் மனைவி உட்பட பாதிக்கப்பட்ட மீனவ குடும்பத்தினர் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் “ உண்மையில் சொல்லப்போனால் நாங்க பொன்னாருக்கு ஓட்டு போடல. அவர்களுக்கும் தெரியும் நாங்க ஒட்டு அவங்களுக்கு போடலன்னு.. ஆனாலும் எங்க மீனவர்கள பஹ்ரைன் நாட்டு சிறையில் இருந்து மீட்கறத்துல ராதாகிருஷ்ணன் அண்ணாச்சிதான் உதவி செய்யறார்.. இப்பவும் ஒரு மந்திரி மாதிரியே எங்களுக்காக எதையும் மனசுல வச்சுக்காம இதவி செய்யறார்.






எங்களை டெல்லிக்கு அழைச்சுக்கிட்டு போய் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரை சந்திக்க வச்சாரு.. அமைச்சர் இப்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.. நிச்சயமா எங்க நான்கு மீனவர்களும் திரும்பி வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு.. நாங்க அண்ணாச்சிக்கு ஓட்டுப் போடாதது தப்புத்தான்.. இனிமேல் அப்படி ஒரு தப்பு பண்ணமாட்டோம் என்றார். சரி இந்த பிரச்சினை தொடர்பாக வசந்த குமார் எம்பிக்கிட்ட சொன்னீங்களா என்று ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார். அதற்கு அவர் பதில் கூறுகையில் எம்பியை எப்ப வேண்டுமென்றாலும் சந்திக்க முடியாது.. இரவு 9.30 மணிக்கு மேல் வசந்த் அன்ட் கோ கடை ஆபீசில் வந்து பார்க்க சொன்னார்கள்.. ஆனால் பெண்களான நாங்கள் எப்படி இரவு நேரத்தில் அங்கு செல்வது என நாங்கள் செல்லவில்லை என்றார். 


Similar News