இந்த முறை தவற விடமாட்டோம் ! சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்தே தீரும்: நிர்மலா சீத்தாராமன் உறுதி.!

இந்த முறை தவற விடமாட்டோம் ! சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்தே தீரும்: நிர்மலா சீத்தாராமன் உறுதி.!

Update: 2019-11-06 05:00 GMT

சென்ற முறை மேலவையில் போதிய பலம் இல்லாததால் பல சீர்திருத்த திட்டங்களை எங்களால் செயல்படுத்த முடியவில்லை, இந்த முறை நாட்டு மக்கள் பெரும்பான்மை பலம் அளித்து வலுவான முறையில் எங்களை பதவியில் அமர்த்தியுள்ளார்கள், எனவே இந்த தடவை பஸ்ஸை தவறவிடாமல் நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று செவ்வாய்க்கிழமை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.


"... சீர்திருத்தங்களுக்கான அர்ப்பணிப்பு பணிகள் வேகமாக நடப்பதை நாங்கள் இப்போது காண்பிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது , ஏனெனில் பிரதமர் மோடிக்கு மக்கள் வழங்கிய 2.0 ஆணை இதற்கு உதவும்" என்றார்.


சமீபத்திய மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களில் நாட்டின் பொருளாதார நிலைதான் பாஜகவின் குறைந்த வெற்றிக்கு காரணமா என பத்திரிக்கையாளர் கேட்டபோது எந்தவொரு அரசியல் கட்சியும், குறிப்பாக அதிகாரத்தில் இருப்பவர்கள், தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தவொரு விஷயத்தையும் தேர்தல் வெற்றி தோல்விக்காக விட்டுக் கொடுப்பது அல்லது நீக்குவது சாத்தியமில்லை.


பிரதமர் மோடியின் முதல் அரசு சீர்திருத்தங்களைச் செய்வதைத் தடுத்தவர்களைத் தாக்கிய அவர்,  அப்போது மேல் அவையில் நாங்கள் பெரும்பான்மை இல்லாதவர்களாக இருந்தோம், அதற்கான விலையை நாடு செலுத்தியது என்றார்.


நிலத்திற்கான அதிக விலை, மின்சாரம் மற்றும் நில பயன்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற வெளிக் காரணிகளால் உற்பத்தித் துறையின் போட்டித்திறன் சிரமமான நிலையில் உள்ளது. அவை தனிப்பட்ட நிறுவனங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டவை, அதனால் அரசாங்கம் இப்போது அனைத்தையும் எளிதாக்க விரும்புகிறது.


"வணிகத்தை எளிதாக்குவதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்," என்று அவர் கூறினார்.


அமெரிக்க-சீனா வர்த்தகப் போர்களைத் தொடர்ந்து டஜன் கணக்கான நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி, வியட்நாம், பங்களாதேஷ் போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் நிறுவனங்களை திறந்த நிலையில், அதுபோன்ற நிறுவனங்களை நம் நாடு நோக்கி இழுக்கவே கார்பரேட் வரிக்குறைப்பு போன்ற சலுகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் நிறுவனங்களின் புதிய முதலீடு அதிகரிக்கும். நீண்ட கால முதலீடுகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையை இது வெளிப்படுத்தியது என்றார். 


Similar News