முக்கிய முடிவை கைவிட்ட வலிமை படக்குழு - அதிர்ச்சியில் அஜித்?

முக்கிய முடிவை கைவிட்ட வலிமை படக்குழு - அதிர்ச்சியில் அஜித்?

Update: 2020-04-08 04:54 GMT

போனி கபூர் தயாரிப்பில் விநோத் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் 'வலிமை'. இப்படத்தின் பட்ப்பிடிப்பு ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் படத்தில் இடம்பெறும் முக்கிய ஆக்ஷன் காட்சிகளை படமாக்க இம்மாத இறுதியில் ஸ்பெயின் மற்றும் மோரொக்கோ செல்ல திட்டமிட்டு இருந்தது படக்குழு.

ஆனால், தற்போது கொரோனா தாக்கத்தால் நிலைகுலைந்து போயிருக்கும் ஸ்பெயினில் இயல்பு நிலை திரும்ப பல மாதங்கள் ஆகலாம என கூறப்படுகிறது. இதனால் ஸ்பெயினுக்கு பதில் வேறு ஏதாவது நாட்டில் சென்று படப்பிடிப்பு நடத்தலாமா என்று படக்குழு அலோசித்துள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி பெரும்பாலான நாடுகள் கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளதால் இந்தியாவிலேயே வேறு எங்காவது இப்படப்பிட்ப்பை நடத்த முடியுமா என்று ஆலோசித்து வருகிறாராம் இயக்குனர் விநோத்.

Similar News