க்ரெட்டா தன்பர்க் தெரியாமல் உடைத்த குட்டு என்ன? சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்படும் சதி.!
க்ரெட்டா தன்பர்க் தெரியாமல் உடைத்த குட்டு என்ன? சர்வதேச அளவில் இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்படும் சதி.!;
அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மற்றும் போர்ன் நடிகை மியா கலீஃபா ஆகியோர் விவசாய போராட்டத்திற்கு ஆதரவு என்ற பெயரில், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான குறிவைத்த பிரச்சாரத்தில் ட்விட்டரில் நேற்று குதித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் சிறுமி க்ரெட்டா தன்பெர்க்கும் இந்த விஷயத்தில் தனது பங்களிப்பை பதிவு செய்தார்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு, உலகெங்கிலும் உள்ள மக்கள் பங்களிக்கும் விதத்தை விவரிக்கும் ஒரு கூகுள் டாக்குமெண்ட்டை அவர் பகிர்ந்தபோது தான் விஷயம் வினையாகிப் போனது.
‘உலகளாவிய விவசாயிகள் போராட்டம்- முதல் அலை’ என்ற தலைப்பில் உள்ள இந்த ஆவணம், உலகெங்கிலும் உள்ள மக்களை மனித வரலாற்றில் ‘மிகப்பெரிய போராட்டத்தின்’ ஒரு பகுதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.வேளாண் துறையை கார்பொரேட் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதே இதன் நோக்கம் என்றும் கூறிக் கொள்கிறது.
ஜனவரி 23 அன்றே குறைந்தது இந்த செயல்பாடுகள் ஆரம்பித்துள்ளது. அதாவது ஜனவரி 26, குடியரசு தின பேரணிக்கு முன்பாகவே சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பெரும் போராட்டம் ஆன்லைனிலும், நிஜ வாழ்விலும் போராட வேண்டிய வழிமுறையைப் பற்றி விரிவாக பேசுகிறது.
இந்த ஆவணம், ஆன்லைனில் மட்டுமல்லாமல் களத்திலும் இந்திய தூதரகங்களுக்கு அருகில் சென்று போராடும் படியும் கேட்கிறது.
முழுவதுமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த போராட்டங்களின் ஒரு பகுதியாக, பிப்ரவரி 4 மற்றும் 5ஆம் தேதியில் 11 மணி முதல் 2 மணி வரை ட்விட்டரில் எந்த மாதிரியான ஹாஷ்டாக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கிறது.
இப்படி ஒவ்வொரு கட்டமாக வழி காட்டப்பட்டிருக்கும் இந்த ஆவணத்தின் தன்மை இது அதிக நிதி வழங்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் என்பதை தெளிவாக தெரிவிக்கிறது. இந்தப் போராட்டங்கள் தானாகவே நடக்கவில்லை.