மத்திய அரசின் உதவித் தொகையைப் பெற விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் ?வேளாண் உற்பத்தி ஆணையர் தகவல்
மத்திய அரசின் உதவித்தொகை பெற விவசாயிகள் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று வேளாண் உற்பத்தி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது .
இந்த உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 38 லட்சத்து 24 ஆயிரம் விவசாயிகள் இந்த உதவியைப் பெற்று வருகின்றனர். வருகின்ற ஆகஸ்ட் மாதம் இந்த உதவித் தொகை ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே விடுவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் விவ சாயிகள் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.