என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் எப்படி என்கிறீர்களா…? இத படிங்க!

என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம் எப்படி என்கிறீர்களா…? இத படிங்க!

Update: 2019-12-21 03:30 GMT

இக்கட்டுரையை படிக்கும் போதே இந்த வரியோடு சேர்த்து இன்னும் பல வரிகளும், காட்சிகளும் உங்களை அறியாமாலேயே உங்கள் மனதில் நினைவுக்கு வரும்


நம் எண்ணங்களின் தரம் நம் வாழ்க்கையை தீர்மாணிக்கும். ஓர் மீன் தொட்டியை பார்க்கிறீர்கள் அத்தொட்டியின் நீரில் அம்மீன்கள் எந்த காரணமும் இன்றி இடமும் வலமுமாக, மேலும் கீழுமாக உலவுவதை பார்க்கிறோம். அதை போலவே, அந்த மீன்களை போலவே களைப்பின் மயக்கத்தில் நாம் கண்ணுருங்க போதும் நம் மனம் அடங்குவதில்லை. அது பல திசைகளிலும் மீனை போல உலவிக்கொண்டேயிருக்கிறது.


ஆனால் அவைகளுக்கும் நமக்குமான ஒரு வித்யாசம். அவைகளுக்கு தன் உலவுதல் குறித்த விழிப்பு இல்லை… கட்டுபாடு இல்லை. நமக்கு இரண்டும் உண்டு.


மனம் எண்ணங்களால் நிரம்பி வழிகிற போது அதில் நாம் சிக்கியிருக்கிற போது நம் தேவையற்ற சிந்தனைகளிலிருந்து மீட்கும் வழிகள் இங்கே.
நீங்கள் யாரையாவது குறித்து யோசிக்கிறீர்கள் என்றால்… அவரை குறித்து சிந்திப்பது உங்கள் வளர்ச்சிக்கு தேவையா தேவையற்றதா என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். தேவையற்றதெனில் அடுத்தவர் குறித்து சிந்திப்பது நம் வேலை அல்ல என்ற சுயஒழுக்கத்தை கடைபிடிப்போம்.


ஓர் பிரச்சனை நம் மனதை பெரிதும் தொந்தரவுக்குள்ளாக்குகிற பொழுது. நம்மை கடும் அழுத்தத்திற்க்கு உள்ளாக்கும் அந்த பிரச்சனையை குறித்து மணிக்கணக்காக யோசிப்பதை விட அதை ஒற்றை வரியில் தெளிவாக கேட்டுவிட முடியுமா… முடியுமெனில் அக்கேள்விக்கு நிச்சயம் ஒற்றை வரியில் தீர்வும் உண்டு என்பதை நம்புவோம்.


உங்களை பிறருடன் ஒப்பிடுவதை முதலில் தவிர்த்துவிடுங்கள். அது உங்களை நீங்களே அவமானப்படுத்துவதற்க்கு இணையானது. ஒவ்வொறு உயிரும் தன்னளவில் ஓர் தனித்தன்மையை கொண்டே படைக்கப்பட்டுள்ளது என்பதை நம்புங்கள்.


பொருள்தன்மையினால் ஆதாயங்களை மட்டுமே எதிர்பார்க்காதீர்கள். பணத்தின் மீதுள்ள தீரா காதலே சில சமயங்களில் உச்சக்கட்ட அழுத்தத்திற்க்கு காரணமாகிவிடுகிறது. உங்கள் உட்சபட்ச திறன் மீது கவனம் செலுத்தி சரியாக செயல்படுத்துங்கள்.. பணம் அதன் வழியில் உங்களை வந்தடையும்


மன ஆரோக்கியத்திற்க்கு உகந்தது நீங்கள் சிலரை, சிலவற்றை மறப்பது மற்றும் மன்னிப்பது. நிகழ்ந்துவிட்ட கடந்த காலம் குறித்து நிகழ்காலத்திலும் எண்ணிகொண்டேயிருந்தால் நாம் இழக்கவிருப்பது வருங்காலத்தை என்ற புரிதல் அவசியம்.


நமக்கு எது வேண்டும் என்று சிந்திப்பதை விட எது தேவை என்பதை சிந்தியுங்கள். காரணம் நமக்கு தேவையானவை சிலது மட்டுமே… நம் மனம் வேண்டுபவைகள் தான் ஏராளம். இந்த இரண்டிற்க்குமான வித்தியாசத்தை உணர்ந்தாலே தேவையற்ற எண்ணங்கள் பலவற்றை கட்டுப்படுத்த முடியும்


Similar News