திரையரங்குகள் திறப்பது எப்போது ?

திரையரங்குகள் திறப்பது எப்போது ?

Update: 2020-04-11 11:33 GMT

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டு பெரும்பாலான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஊரடங்கில் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் மக்கள் தனியார் தொலைக்காட்சி, OTT போன்றவற்றில் தொடர்ந்து படங்களைப் பார்த்து வந்தாலும் எப்போது வழக்கம் போல் வெளியே வந்து திரையரங்கிற்குச் சென்று படங்களைக் பார்க்க போகிறோம் என்று எண்ணத் துவங்கிவிட்டனர்.

இதனால் திரையரங்கு மீண்டும் எப்போது வழக்கம் போல் இயங்கும் என்பதைப் பற்றி நாம் விசாரித்த போது, மே 31 வரை தங்கள் திரையரங்குகளை மூடி வைக்க மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

கொரோனா சமூக பரவல் ஏற்படாமல் இருக்க அரசு தரப்பில் ஜூன் மாத இறுதி வரை திரையரங்கு, பூங்கா, கடற்கரை, மக்கள் அதிகம் கூடும் வழிபாட்டுத் தளங்கள் மற்றும் சுற்றுலா தளங்களை மூடி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். ஜூன் மாத இறுதியில் நிலவரம் எப்படி என ஆராய்ந்த பின் தான் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று தெரிகிறது. 

Similar News