“பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசிய விஜயதரணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” - கராத்தே தியாகராஜன் கேள்வி !!

“பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசிய விஜயதரணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?” - கராத்தே தியாகராஜன் கேள்வி !!

Update: 2019-06-29 10:37 GMT


காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத்தலைவராக பதவி வகித்துவந்த கராத்தே தியாகராஜன், அக்கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.


இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தைப் பார்த்துவிட்டு வந்த  கராத்தே தியாகராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: -


என்னை மட்டும் குறிவைத்து உள்நோக்கத்துடன் நீக்கியுள்ளார்கள். எந்த விளக்கமும் கேட்காமல் என்மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.


பிரதமர் மோடியை ஆதரித்துப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்காதது ஏன்? ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸின் கொள்கையை எதிர்த்து நான் பேசவில்லையே.


நான் பேசியது தவறேனில், கூட்டத்தின்போதே  ஏன் அழகிரி என்னைக் கண்டிக்கவில்லை? ராகுலுக்குத் தெரிந்துதான் என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நானும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியைக் கேட்டதால், அழகிரி என்மீது அதிருப்தியில் உள்ளார்.


காங்கிரஸ் சொத்தைக் கொள்ளையடித்தவர் கோபண்ணா. காமராசரின் பெயரில் புத்தகம் போட்டுக் கோடிக்கணக்கில் சம்பாதித்தார். இந்த மாதிரியான ஆட்களை எல்லாம் கட்சிக்குள் வைத்திருக்கிறார்கள். 


இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார்


Similar News