பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை ஏன் தடை செய்யக்கூடாது? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இன்னும் குறையவில்லை இந்த பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களை ஏன் தடை செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது

Update: 2022-10-21 15:00 GMT

தமிழ்நாட்டில் சில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட் தடை உத்தரவு சரிதான் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் பி.டி ஆஷா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.


இந்த வழக்குகள் நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்குமட்டையில் செய்த பொருட்கள் மண்குடுவை போன்ற என்னென்ன பொருட்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பது குறித்த பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்து ஆவணங்களை தாக்கல் செய்கிறேன். பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று கூறினார்.


மேலும் ஐகோர்ட் வளாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் எந்திரங்கள் வருகிற 28ஆம் தேதி வைக்கப்பட உள்ளது. ஐகோர்ட் உத்தரவுபடி உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளது. என்றும் அரசு வக்கீல் கூறினார். இதை அடுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்து பிரபலப்படுத்துவது தொடர்பான ஆவணங்களை பார்த்த நீதிபதிகள் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தலாம் பிளாஸ்டிக் பயன்பாடு இன்னும் குறையவில்லை. இந்த பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் உற்பத்தி நிறுவனங்கள் எத்தனை இயங்குகின்றன  அந்த நிறுவனங்களை ஏன் தடை செய்யக்கூடாது? என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வக்கீல். இதுவரை 150 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என பதில் அளித்தார். பின்னர் நீதிபதிகள் சென்னை ஹ கோர்ட் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் புதிய வக்கீல்கள் பதிவு நிகழ்ச்சி அண்மையில் நடந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அதிக பிளாஸ்டிக் பொருட்கள் குப்பையாக ஹைகோர்ட் வளாகம் முழுவதும் கிடந்தது என்று கூறினார் .அப்போது கோர்ட்டில் ஆஜராகி இருந்த பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் எம். வேல்முருகன் முதல் தலைமுறை பட்டதாரிகள் பலர் சட்டப்படிப்பை முடித்து வைக்கீலாக வருகின்றனர். அவர்கள் வகக்கீலாக பதவி ஏற்பதை பார்க்க அவர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர்.அவர்கள் பரிசு பொருட்களை வாங்கி வருவதால் பிளாஸ்டிக் குப்பைகள் வளாகத்தில் அதிகமாகி விடுகிறது.முன்பு வக்கீல் பதிவின்போது போஸ்டர் ஓட்டுவது வெடி வெடிப்பது போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தன.அதற்கு தடை விதிக்கப்பட்டது போல் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கும் என்று கூறினார். பார் கவுன்சில் தரப்பு வக்கீல் சந்திரசேகர் நீதிபதிகள் தெரிவித்த கருத்தை பார் கவுன்சில் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை தள்ளி வைத்தனர்.




 





Similar News