அரணை கடித்தால் மரணம் நிகழுமா?
பண்டைய காலம் முதல் அரணை கடித்தால் மரணம் நிகழும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது
அரணை கடித்தால் உடன் மரணம் என்று ஒரு நம்பிக்கை பண்டைய காலத்தில் இருந்து வந்தது .வலையில் இருந்து தலையை மட்டும் நீட்டும் அரணையின் கழுத்து வரை உள்ள பாகம் மட்டுமே வெளியில் தெரியும் என்றதால் ஏதாவது விஷப்பாம்பாக இருக்கும் என்று தவறாக புரிந்து கொள்வது உண்டு. விஷம் தீண்டுவதால் வரும் மரணங்களில் வ பெரும்பான்மையானது பயத்தினால் வருகின்றது என்பது நிஜம் .அரணை கடித்தால் மரணம் என்ற நம்பிக்கையில் இருப்பவர்கள் யாராவது அதிக பயத்தினால் வந்த இதய நோயால் இறந்து போயிருக்கலாம் இது போன்ற நிகழ்வுகள் இந்த நம்பிக்கையை உறுதி செய்யுமாறு அமைந்திருக்கலாம் என்று ஒரு விஷ சிகிச்சை நிபுணர் கூறியிருக்கின்றார் .
இந்த தகவல் பலர் கையில் வந்து சேர்ந்து நாளடைவில் அரணையை ஒரு விஷ பிராணியாக காண தொடங்கினர் என்று நம்புவதில் தவறில்லை .எப்படியும் அரணை எப்போதாவது தான் கடிக்கும் என்றும் கடிக்க நினைத்து வந்தாலும் ஆளுக்கு அருகில் வரும்போது மறந்து திரும்பிவிடும் என்றும் கருதுகின்றனர். கடிக்க உத்தே சித்த நபர் அல்ல என்று புரிந்து கொண்டு தான் திரும்பச் செல்கின்றது என்றும் ஓர் நம்பிக்கை உண்டு.இந்த மறதி கதையை வைத்து சிலர் நபர்களை அரணை புத்தி உடையவன் என்றும் கூறுவதுண்டு.
சில அரணைகளின் இரு பக்கங்களிலும் காணும் நிறம் விஷம் சேகரித்து வைத்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அரணை விஷம் இல்லாத ஒரு சாதுவான பிராணி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அரணையின் இரு பக்கங்களிலும் காணப்படும் சிவப்பு கலந்த மஞ்சள் நிறம் இனவிருத்தி காலத்தில் ஆண் அரணையில் மட்டுமே காணப்படும். இதற்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை. எப்படி இருந்த போதிலும் எந்த ஜந்துவை பார்த்தாலும் நாம் சற்று தூரம் தள்ளி இருப்பது நம் உடல் நலத்திற்கும் நல்லது மனநலத்திற்கும் நல்லது .எந்த ஊர்வன வகையைச் சேர்ந்த விலங்கினங்களை பார்த்தாலும் நாம் நம்மை பாதுகாப்போடு வைத்துக் கொள்வது நம் ஆயுளை நீட்டிக்கும்.